Posts

Showing posts from June, 2018

போர் எனும் பெருந்தீனிக்காரன் - ததீசி முனி

Image
போர்க் கருவிகள் இருந்தாலே போர் செய்யும் உணர்வு வந்துவிடும். அக்காலம் முதலே போரைத் தவிர்ப்பதற்கு ஆலோசனை சபைகளும், சூழ்ச்சி விளைவிக்கும் ஒற்றனின் குறிப்புகளும் பயன்பட்டு வந்தன. உடனடி போரைத் தவிர்த்து சூழ்ச்சிக்குள் இறங்கி உயிரிழைப்பைத் தவிர்க்க நினைக்கும் திட்டங்களையும் நாம் கம்பராமாயணத்தில் காண்கிறோம். ராமன் மட்டுமல்லாது கொடிய அரக்க ராஜன் எனக் கூறப்படும் ராவணன் கூட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியிருப்பதைக் கம்பர் பாடியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக  வெளிப்படையாகத் தெரியும் வடிவில் மட்டுமே போர்க்கருவிகள் எப்போதும் வருவதில்லை. நல்லுருவமும் தீயுருவமும் கொண்டு மாயமாக அவை வருவதை நாம் புராணங்களிலும் காப்பியங்களிலும் காண்கிறோம். பூதனை, சுரசை, அங்காரதாரை, கூனி, சகுனி என போர் தெய்வம் தம் கருவிகளை வெளிப்படையாகத் தெரிய வலம் வருவதில்லை. பலருக்கும் காமமும், குரோதமும், மோகமும் மாயமாகத் தங்கள் சுய சிந்தனையை மறைக்கும். சீதையின் அழகு மீதான ஆசையின் உருவில் ராமாயணத்திலும், தருமனின் சூதாட்ட வெறியின் மாயத் தோற்றத்தில் மகாபாரதத்திலும் போர் தனது ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்தது. சிறிய தோட்டா கடைசி மாவில்

கனவுகளைப் புதைப்பவர்கள்

Image
சில நாட்களுக்கு முன் நடந்த கவிதை விவாதத்தில் கவிஞர் இசை பற்றிய ஒரு உரையாடலில் நவீனக்கவிதையின் அண்மைக்கால மாற்றங்களைப் பற்றி எழுதியிருந்தேன் . அதைப் படித்த நண்பர்  சிவா கிருஷ்ணமூர்த்தி  , “அது எப்படி? நையாண்டிக்கவிதையைப் பலரும் எழுதியிருக்கிறார்களே? சும்மா மரபைக் கிண்டல் செய்வது என்பது ரொம்ப காலமாக நடந்து வருவதுதானே,” என்றார். அதைப் பற்றிப் பேசப்புகுந்து நவீனக் கவிதை காலகட்டத்தில் வந்த ஒற்றை வரி கேலிகளையும் இன்றைக்கு இசை, வெயில் உட்பட பல கவிஞர்கள் எழுதும் நையாண்டிக்கும் உள்ள வித்தியாசத்தை நுணுகிப்பார்க்கவேண்டியிருந்தது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் மரபை கிண்டல் செய்தும், விழுமியங்களை கேலி செய்தும் பலவிதமான கவிதைகள் எழுதப்பட்டன. அப்போது எதையாவது பற்றிக்கொண்டு சிந்தனையை முன்னகர்த்திவிட வேண்டும் எனும் எண்ணத்தை விட, மரபும் அது சார்ந்த அறிதல்களும் நம்மை பின்னுக்கு இழுத்துவிடும் முக்கியமான கருத்தியல்கள் எனும் எண்ணம் பரவலாக இருந்ததை கவனிக்க முடிகிறது. இது தமிழுக்கு மட்டுமான தனித்துவம் அல்ல. அக்காலகட்டத்தில் மரத்தியில், இந்திய ஆங்கிலத்தில் (my motherland/you are in the world’s

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

Image
மரப்பாச்சி உடலின் மீது ஆதிக்கத்தைச் செலுத்த எண்ணும் ஆண் பெண்ணுக்குள் இருக்கும் குழந்தையை நசுக்கிவிடுகிறான். அவனது ஆதிக்கம் வெறும் உடலோடு நின்றுவிடுவதில்லை. அவனது காம வெறிக்கு ஆளாகும் பெண் தனக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை இழக்கும் முதல் தருணம் இக்கதையில் பதிவாகியுள்ளது, பரணில் கிடைத்த மரப்பாச்சியுடன் தனது வாழ்வைக் கழிக்கத் தொடங்குகிறாள் அந்த சிறுமி. பழைய பொம்மையானாலும் புது கவர்ச்சி. அதன் அழகிய வடிவிலும், புராதண ஜடை பின்னல்களிலும் மனசை இழக்கிறாள். எல்லாக் குழந்தைகள் போல அதனோடு உரையாடுகிறாள். தங்கை பிறந்தபின் தன்னைப் புறக்கணிக்கும் பெற்றோரிமிருந்து மரப்பாச்சியிடம் அடைக்களம் ஆகிறாள்.   உயிரற்ற ஒரு பொருள் அவளது வாழ்வின் ஒவ்வொரு பருவத்தோடும் உறவாடுகிறது. மண் போல பருவத்துக்கு ஏற்றார்போல புது வகைப் பழங்களைத் தருகிறது. குழந்தைப் பருவத்தில் விளையாட்டுத் தோழி, சிறு பெண்ணாகும்போது ஊடலுக்கும் கூடலுக்குமான நண்பி. தனது மனம் கூட அறியாத கிளர்ச்சிகளையும் மர்மங்களையும் பகிராமலேயே உணர்ந்துகொள்கிறது மரப்பாச்சி. அவள் அறியாத இன்பத்தை சிறு ஆண் வடிவிலில் தருகிறது. வயதுக்கேற்ற வகையில் விள