Posts

Showing posts from January, 2019

தேவைசார்ந்த எந்திரம்

Image
நாகரத்தினம் கிருஷ்ணாவின் " சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது " எனும் அறிபுனைவு ஆண்டிராய்ட் எனும் ரொபோக்கள் மனிதர்களுக்கு உபயோகமான செயல்களைச் செய்துத்தரும் benefit robot பற்றியது. தமிழில் வரும் பெரும்பாலான அறிபுனைக்கதைகள் ஆங்கில அறிவியல் புனைவுகளைச் சார்ந்திராமல் ஹாலிவுட் அறிவியில் படங்களை ஒத்திருக்கின்றன.   எந்திரமயமாக்கப்பட்ட உலகில் மனிதனின் இருப்பு சார்ந்த தத்துவக் கேள்விகளையோ,   எந்திரத்துடனான உறவு சார்ந்த கேள்வியை மையமாகவோ, மனிதனின் எதிர்கால முக்கியத்துவம் சார்ந்த functional/utilitarian பார்வையை முன்வைப்பதாகவோ ஆங்கில அறிபுனைவு பொதுவாக அமைந்திருக்கும். கதையின் மையத்தில் மனிதனின் இருப்பு சார்ந்த தீவிரமான தத்துவக்கேள்வி இருக்கும். சுவாரஸ்யமான கதைப்பின்னலைத்தாண்டி இப்படிப்பட்ட கேள்விகளே மனிதனின் எல்லைகளை விஸ்தரிக்கும்படி சிந்திக்கவைக்கின்றன. சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது கதையில் வரும் ஆன்டிராய்ட் பெண், வீட்டு வேலைகளைச் செய்வது, குழந்தை கெவினைப் பார்த்துக்கொள்வது எனும் அடிப்படைச் செயல்களைச் செய்வதோடு, கதிரேசனுடைய காமத்தேவைகளுக்கும் பயன்படுகிறாள்.