Posts

Showing posts from March, 2019

கலையின் கதை - உலகை மாற்றிய சில ஓவியங்கள்

Image
சென்ற மாதம் லண்டனில் உள்ள புகழ் பெற்ற பிரிட்டீஷ் ஓவியக்கூடத்தில் நவீன ஓவியங்களை அர்த்தம் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு ஓவியம் என் கவனத்தை முழுவதும் கவர்ந்தது . அது டேவிட் ஹாக்னி வரைந்த "My Mother" என்ற ஓவியம் (Pic-MyMother) - இதன் மூலம் நல்ல ஓவியங்களுக்கான உப்பு கார சுவைக்கான அடையாளங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். தெரியாததை தெரிந்தது வழியாக அடைய முடியாது என்பது நிச்சயமான உண்மைதான். இந்நிலையில் 'The Story of Art' by E.H.Gombrich என்ற புத்தகம் கிடைத்தது. குகை ஓவியங்களிலிருந்து இந்த நூற்றாண்டு ஓவியம் வரை விவரமாக ஆராய்ந்து விவரித்திருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிக்மண்ட் ஃராய்ட் போன்ற மனோத்துவ ஆராய்சியாளர்களின் பாதிப்பால் நம் செயல்,பேச்சு முதல் காலை சாப்பிடும் இட்லி,இரவு உடுத்தும் உடைகளுக்கு மனோரீதியான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டன. இதன் நீட்சியாக கலையில் பலவித மோஸ்தர்களும் இஸங்களும் உருவாக ஆரம்பித்தது.Pointillism, Impressionism,Abstract art போன்றவை உருவாயின. இவை மக்களுக்கு குழப்பத்தையே அதிகரித்தன. இந்த ஓவியங்களுக்கான அர்த்தத்தை ஓவிய