Posts

Showing posts from February, 2019

என்றென்றும் தாழ்மையுடன் - விஞ்ஞானச் சிறுகதை

Image
1 - வெய்யில் தாழ்ந்துடுத்துன்னா பெரிய கோயில் வரைக்கும் நடந்துட்டு வரலாமா? - போலாம்..ஆனா மத்தியானம் செடிக்கு தண்ணி குத்த போகும்போது ஒரேடியா அனத்தித்து. கார்த்தாலேர்ந்து கால் வேற வீங்கிணபடியே இருக்கு. - இன்னிக்கு கால் மாட்டிண்டுதா, தங்கம். எல்லாரும் நடக்கற தூரத்தில பீச்சும் , தீபாராதணை காட்டினா முத்தத்தில வெளிச்சம் படர தூரத்தில வீடு கிடைக்காதான்னு இருக்கா, நீவேற. - நேத்து புவனா சொன்னபோது மட்டும் - ஆமாமா சுனாமி வந்தா தப்பிச்சு ஓடர தூரத்திலயாவது வீடு இருக்கணும்னு சொன்ன. - காலவேனா இறக்கிவிட்டுக்கோ, ரத்த ஓட்டம் இருந்தா விறுவிறுன்னு இருக்கும்.காபி வேணா போடட்டுமா? - வேணாம். மத்தியானம் சாப்பிட்ட பாலே நாக்குல சுழட்டிண்டே இருக்கு. போகும்போது அந்த ஜன்னல திறந்துட்டு போ. - நானாவது கொஞ்சமா சமையல் உள் வர நடந்துட்டு வரேன். - ஓடிட்டுதான் வாயேன். என்ன , போன மாசம்தானே அறுபதாங்கல்யாணம் கொண்டாடினே. - ஆமா, அப்பல்லாம் சாங்காலம் ஆச்சுன்னா அவர் வர்ற வண்டி சத்தத்துக்காக காத்துண்டிருப்பேன். ஜன்னல் கிட்ட நின்னாலே அவருக்கு பிடிக்காது.என்னவோ இந்த புருஷாளுக்கெல்லாம் ஒரு கோவம் வருதும்மா. - சொல்