Posts

கலையின் கதை - உலகை மாற்றிய சில ஓவியங்கள்

Image
சென்ற மாதம் லண்டனில் உள்ள புகழ் பெற்ற பிரிட்டீஷ் ஓவியக்கூடத்தில் நவீன ஓவியங்களை அர்த்தம் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு ஓவியம் என் கவனத்தை முழுவதும் கவர்ந்தது . அது டேவிட் ஹாக்னி வரைந்த "My Mother" என்ற ஓவியம் (Pic-MyMother) - இதன் மூலம் நல்ல ஓவியங்களுக்கான உப்பு கார சுவைக்கான அடையாளங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். தெரியாததை தெரிந்தது வழியாக அடைய முடியாது என்பது நிச்சயமான உண்மைதான். இந்நிலையில் 'The Story of Art' by E.H.Gombrich என்ற புத்தகம் கிடைத்தது. குகை ஓவியங்களிலிருந்து இந்த நூற்றாண்டு ஓவியம் வரை விவரமாக ஆராய்ந்து விவரித்திருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிக்மண்ட் ஃராய்ட் போன்ற மனோத்துவ ஆராய்சியாளர்களின் பாதிப்பால் நம் செயல்,பேச்சு முதல் காலை சாப்பிடும் இட்லி,இரவு உடுத்தும் உடைகளுக்கு மனோரீதியான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டன. இதன் நீட்சியாக கலையில் பலவித மோஸ்தர்களும் இஸங்களும் உருவாக ஆரம்பித்தது.Pointillism, Impressionism,Abstract art போன்றவை உருவாயின. இவை மக்களுக்கு குழப்பத்தையே அதிகரித்தன. இந்த ஓவியங்களுக்கான அர்த்தத்தை ஓவியரின்…

என்றென்றும் தாழ்மையுடன் - விஞ்ஞானச் சிறுகதை

Image
1

- வெய்யில் தாழ்ந்துடுத்துன்னா பெரிய கோயில் வரைக்கும் நடந்துட்டு வரலாமா?

- போலாம்..ஆனா மத்தியானம் செடிக்கு தண்ணி குத்த போகும்போது ஒரேடியா அனத்தித்து. கார்த்தாலேர்ந்து கால் வேற வீங்கிணபடியே இருக்கு.

- இன்னிக்கு கால் மாட்டிண்டுதா, தங்கம். எல்லாரும் நடக்கற தூரத்தில பீச்சும் , தீபாராதணை காட்டினா முத்தத்தில வெளிச்சம் படர தூரத்தில வீடு கிடைக்காதான்னு இருக்கா, நீவேற.

- நேத்து புவனா சொன்னபோது மட்டும் - ஆமாமா சுனாமி வந்தா தப்பிச்சு ஓடர தூரத்திலயாவது வீடு இருக்கணும்னு சொன்ன.

- காலவேனா இறக்கிவிட்டுக்கோ, ரத்த ஓட்டம் இருந்தா விறுவிறுன்னு இருக்கும்.காபி வேணா போடட்டுமா?

- வேணாம். மத்தியானம் சாப்பிட்ட பாலே நாக்குல சுழட்டிண்டே இருக்கு. போகும்போது அந்த ஜன்னல திறந்துட்டு போ.

- நானாவது கொஞ்சமா சமையல் உள் வர நடந்துட்டு வரேன்.

- ஓடிட்டுதான் வாயேன். என்ன , போன மாசம்தானே அறுபதாங்கல்யாணம் கொண்டாடினே.

- ஆமா, அப்பல்லாம் சாங்காலம் ஆச்சுன்னா அவர் வர்ற வண்டி சத்தத்துக்காக காத்துண்டிருப்பேன். ஜன்னல் கிட்ட நின்னாலே அவருக்கு பிடிக்காது.என்னவோ இந்த புருஷாளுக்கெல்லாம் ஒரு கோவம் வருதும்மா.

- சொல்லணுமா..அவர் போகும்போது…

தேவைசார்ந்த எந்திரம்

Image
நாகரத்தினம் கிருஷ்ணாவின் "சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது" எனும் அறிபுனைவு ஆண்டிராய்ட் எனும் ரொபோக்கள் மனிதர்களுக்கு உபயோகமான செயல்களைச் செய்துத்தரும் benefit robot பற்றியது. தமிழில் வரும் பெரும்பாலான அறிபுனைக்கதைகள் ஆங்கில அறிவியல் புனைவுகளைச் சார்ந்திராமல் ஹாலிவுட் அறிவியில் படங்களை ஒத்திருக்கின்றன.எந்திரமயமாக்கப்பட்ட உலகில் மனிதனின் இருப்பு சார்ந்த தத்துவக் கேள்விகளையோ, எந்திரத்துடனான உறவு சார்ந்த கேள்வியை மையமாகவோ, மனிதனின் எதிர்கால முக்கியத்துவம் சார்ந்த functional/utilitarian பார்வையை முன்வைப்பதாகவோ ஆங்கில அறிபுனைவு பொதுவாக அமைந்திருக்கும். கதையின் மையத்தில் மனிதனின் இருப்பு சார்ந்த தீவிரமான தத்துவக்கேள்வி இருக்கும். சுவாரஸ்யமான கதைப்பின்னலைத்தாண்டி இப்படிப்பட்ட கேள்விகளே மனிதனின் எல்லைகளை விஸ்தரிக்கும்படி சிந்திக்கவைக்கின்றன.
சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது கதையில் வரும் ஆன்டிராய்ட் பெண், வீட்டு வேலைகளைச் செய்வது, குழந்தை கெவினைப் பார்த்துக்கொள்வது எனும் அடிப்படைச் செயல்களைச் செய்வதோடு, கதிரேசனுடைய காமத்தேவைகளுக்கும் பயன்படுகிறாள். ஒவ்வொரு சேவைக்கும் ஒரு விலை வைத…

அத்தாவர விரல்களை விட்டுவிட்டு வராதே

Image
இந்தியாவில்இந்தமுறைபலநண்பர்கள்,விட்டுவந்தஉறவுகளைசந்திக்கமுடிந்தது.எல்லாரிடமும்ஒருமணிரெண்டுமணிநேரங்கள்.நலவிசாரிப்புகள்,தினவாழ்க்கைசக்கரங்களைப்பகிர்வதற்குள்அடுத்தகட்டஅழுத்தங்களில்அவரவர்.யாருமில்லை யாருக்கும். கூதிர்காலச் சிலைகள் போல பளீரென தோன்றும் சில சித்திரங்கள் பால்யத்தை நினைவூட்டின. சிறு நகர காலைகள் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமியரால் நிரம்பியிருந்தது. வழியச் செல்லும் ஆட்டோக்களில் பள்ளிச்சீருடைகள் சிரிப்பை அணிந்து சென்றபடி இருந்தன.கனத்த புத்தக மூட்டைகளில் நெல்லிக்காய்களிடையே நேற்று சேகரித்த நட்பும் சண்டையும் கலந்திருக்குமா? பாரபட்சமற்ற வெயிலில் விபூதி பட்டைகள் கரைந்திருப்பது அறியாது தெப்பகுளத்தைச் சுற்றுவது போல நெற்றியைச் சுற்றி துடைத்துக்கொள்ளும் சிறுவர்கள். கூட்டத்தில் எங்கோ என் நண்பனையும், நான் எங்கோ பார்த்த நன்கறிந்த மற்றொருவனும் கலந்து செல்லும் சித்திரம். நானே உள்ளிருப்பது போன்ற ஒரு உணர்வு. அந்த சிறுவனின் நடை என்னை விட்டு நீங்கவில்லை. அத்தனை இயல்பு அதே சமயம் அந்த வயதில் மட்டுமே சாத்தியமாகும் வெகுளித்தனம். பெரியவனாக மாறும் பாவனை. நண்பனிடம் ஏதோ திட்டத்தை விவரிக்கும்…

வலை - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

Image
பாலசுப்ரமணியன்பொன்ராஜ்எழுதிய சிறுகதை அ குறுநாவல் வலை - அவரது பிற புனைவு முயற்சிகளிலிருந்து தனித்துத் தெரிவது. துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை தொகுப்பில் எனக்குப் பிடித்த கதையும் இது தான். குறிப்பாக கதையின் தொடக்கம் யதார்தத்தை மீறிய தளத்தில் உண்மைக்கும் புனைவு எனும் கற்பிதத்துக்கும் இடையே ஊசலாடும் இழைகளைத் தொட்டுச் செல்கிறது. வெளிச்சத்தில் மட்டுமே தெரியும் சிலந்தியின் வலை எனச் சொல்லத் தொடங்கும்போது வெளிச்சமில்லாமல் தெரியும் பிற உலகுடனான தொடர்பும் நம்மை கேள்வி கேட்கத் தூண்டுகிறது. பூக்களின் வாசனையைக் கொண்டு வயதை அறியுமளவு நுட்பமும் துல்லிய புலனுணர்வும் கொண்ட கதைசொல்லி தனது முடிவுக்காலம் எனும் தருவாயில் சிலந்தி வலை பின்னுவதை முதல் முறையாகக் காண்கிறான். காண்பது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம் என்றாலும் படிக்கும் நமது இயல்புக்கு ஏற்ப பால் நிலைகளைச் சித்தரித்துக்கொள்ளும் சுதந்திரம் மாயயதார்த்தக் கதைக்கு உள்ளதால் அதை நாமும் சுவீகரித்துக்கொள்ளலாம். மெளனம் நிரம்பிய அந்த அறையில் காதறையும் அளவிற்கு சிம்பொனி ஒலியுடன் சிலந்தி வலை பின்னுகிறது. ஊடும்பாவுமாக காலத்தையும் அகாலத்தையும், ரூப அரூபத்தையும், …

மென்பொருள் துறை பொட்டி தட்டும் வேலையா?

Image
மென்பொருள் துறைவேலையைப்பற்றிநம்மவர்களுக்குப் பொதுவான அபிப்பிராயங்கள் சிலது உண்டு. பொட்டி தட்டுவது, ஆண் பெண்கள் ஜாலியாக இருந்தபடி வேலை செய்வது, அள்ளி வாங்கும் பணத்தில் குடி, போதை என மிதமிஞ்சிய சல்லாபங்களில் ஈடுபடுவது, பிற துறைகளை அலட்சியம் செய்யும் மனப்பாங்கோடு இருப்பது என பலவிதமான கருத்துகள் உண்டு. பொதுவாகவே இவை கணினி துறை சார்ந்த வேலையில் இல்லாதவர்களின் கருத்தாக இருக்கும். பிற சேவை மையத்தொழில்கள் பற்றியும் இப்படிப்பட்ட அபிப்ராயங்களையும் இதே ஆட்கள் வைத்திருப்பதைக் காணலாம். பிபிஓ துறை பிரபலமானபோது இந்த விஷம் மேலும் அதிகமாகப் பரவி ஒரு தலைமுறையினரிடையே கணினித் துறை பற்றி மிக கீழ்த்தரமான கருத்துகள் பரவ வழிவகுத்தது. கிழக்குக்கடற்கரைச் சாலை எனும் பெயரில் கதைகளும, சினிமாக்களும் இத்துறை சார்ந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களால் கீழ்த்தரமாக வசை பாடப்பட்டது. வழக்கம்போல இத்துறையில் இயங்கும் பெண்களே இவர்களின முதல் இலக்கு. இதனால் கணினித் துறையில் வேலை செய்பவர் என ஒரு அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது கவனமாக பிபிஓ அல்ல என ஒரு மறுப்பையும் சேர்த்துச் சொல்லத் தொடங்கினர். அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்பத…

மனத்திரைகளின் ஆட்டம் - சுரேஷ் பிரதீப் எழுதிய "சொட்டுகள்"

Image
சுரேஷ்பிரதீப்பின்சொட்டுகள்கதையின்நாயகிவளர்ந்துமுதல்வேலைக்குப்போகும்வரைஷவரில்குளித்ததில்லை. பக்கெட்டில் சேர்த்து வைத்த தண்ணீரில் மட்டுமே குளித்துவந்தவள். வேகமாக ஓடும் ஆற்றில், அருவியில் என நீரின் இயல்பான ஓட்டத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டது கிடையாது.அவளது எந்த செயலும் அம்மாவைக் கோபப்படுத்தும். அதற்கான காரணங்கள் கதையில் இல்லாவிட்டாலும் நம்மால் ஊகிக்க முடிகிறது. குடும்ப வாழ்வினால் வீழ்ச்சியைச் சந்தித்த அவளது ஆற்றாமை கரிப்பாக எல்லார் மீதும் முடிகிறது வெளிப்படுகிறது. சிறு வயதிலிருந்து அப்படி சீண்டப்பட்டு வளர்ந்தவள் வேலைக்குச் செல்லும்போது வீம்புக்காக பூனாவில் வேலை தேடிக்கொள்கிறாள். தன்னை விட்டு விலக நினைக்கும் பெண் மீது சகலவிதமான அச்சுறுத்தல்களையும் அவளது அம்மா பிரயோகப்படுத்துகிறாள். அம்மாவுக்குத் தாங்க முடியாத வேதனை தருகிறது எனும் எண்ணமே பெண்ணின் வெற்றியாகிறது. அவளால் இயன்றவரை அம்மா மீது வன்மத்தை கொட்டுகிறாள். தன்னுள் விழுந்த சொட்டின் முதல் சுவையை அவள் அறிந்துவிட்டாள்.
முதல் முறை ஷவரில் குளிக்கும்போது புதுவிதமான நீரை அறிகிறாள். ஓடும் நீர். உடலின் ஒவ்வொரு துளியிலும் பட்டுத் துளிர…