Posts

Showing posts from June, 2019

இயற்கை எரிவாயு யுத்தம் - ஐரோப்பாவின் நெருக்கடி

Image
ஐரோப்பாவில் நடப்பது என்ன? பல்கேரியாவிலுள்ள கிராஸிமிர் இவானாவிற்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது.தன் வீட்டினுள் நுழையும்வரை இயற்கை எரிவாவு பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. பத்து வயது நிகலாவ் இரண்டு நாளாக பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. தன் அப்பாவும் அலுவகத்திலிருந்து சீக்கிரம் வீடு திரும்புவதை ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறான்.அவனுடைய அண்ணன் பின்கட்டில் விறகு அடுக்கிக்கொண்டிருக்க புத்தகத்தில் மட்டுமே படித்திருந்த கற்கால வாழ்க்கையை அனுபவிக்கும் அவலத்தை விரக்தியோடு பார்த்துக்கொண்டிருந்தான். 1990 களில் நிலவிய குளிர் போருக்குப் பிறகு ஐரோப்பா மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கிறது.இது இயற்கை எரிவாயுவிற்கான போராட்டம். ரஷ்யாவின் காஸ்ப்ரோம் என்னும் எரிவாயு நிறுவனத்திலிருந்து ஐரோப்பா நாடுகள் தங்களின் எண்பது சதவிகித தேவைக்கு எரிபொருள் வாங்குகிறது.இந்த எரிபொருள் மொத்தமும் உக்ரேன் நாட்டின் நிலத்தடி குழாய்கள் வழியே வழங்கப்படுகிறது.இங்குதான் பிரச்சனை ஆரம்பமானது.கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டும் உக்ரேன் ஒரு சதவிகித எரிபொருளை அந்த குழாய்களிலிருந்து தனிகிளை வழியே உறிஞ்சிக்கொண்டிருக்கி