இயற்கை எரிவாயு யுத்தம் - ஐரோப்பாவின் நெருக்கடி

ஐரோப்பாவில் நடப்பது என்ன?


பல்கேரியாவிலுள்ள கிராஸிமிர் இவானாவிற்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது.தன் வீட்டினுள் நுழையும்வரை இயற்கை எரிவாவு பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. பத்து வயது நிகலாவ் இரண்டு நாளாக பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. தன் அப்பாவும் அலுவகத்திலிருந்து சீக்கிரம் வீடு திரும்புவதை ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறான்.அவனுடைய அண்ணன் பின்கட்டில் விறகு அடுக்கிக்கொண்டிருக்க புத்தகத்தில் மட்டுமே படித்திருந்த கற்கால வாழ்க்கையை அனுபவிக்கும் அவலத்தை விரக்தியோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

1990 களில் நிலவிய குளிர் போருக்குப் பிறகு ஐரோப்பா மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கிறது.இது இயற்கை எரிவாயுவிற்கான போராட்டம். ரஷ்யாவின் காஸ்ப்ரோம் என்னும் எரிவாயு நிறுவனத்திலிருந்து ஐரோப்பா நாடுகள் தங்களின் எண்பது சதவிகித தேவைக்கு எரிபொருள் வாங்குகிறது.இந்த எரிபொருள் மொத்தமும் உக்ரேன் நாட்டின் நிலத்தடி குழாய்கள் வழியே வழங்கப்படுகிறது.இங்குதான் பிரச்சனை ஆரம்பமானது.கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டும் உக்ரேன் ஒரு சதவிகித எரிபொருளை அந்த குழாய்களிலிருந்து தனிகிளை வழியே உறிஞ்சிக்கொண்டிருக்கிறது.இதற்கான பணத்தையும் காஸ்ப்ரோமுக்கு கட்டியதில்லை.கடந்த ஆகஸ்ட் 2008-இல் இதற்கான விலையான 172 மில்லியன் டாலர்களை காஸ்ப்ரோம் கட்டசொன்னபோது டிசம்பர் மாதம் வரை அதை உக்ரேன் நிராகரித்துவந்துள்ளது.இந்த உதாசீனத்தால் உக்கிரமடைந்த ரஷ்யா இரண்டு முறை மிரட்டிப்பார்ததற்கு பின்னர் சுவஸ்சர்லாந்தின் எரிவாயு நிறுவனத்தின்வழியே இந்த பணத்தை உக்ரென் கட்டியதால் நிலைமை தற்காலிகமாக முற்றுப் பெற்றது.

இதற்கு நடுவே உக்கிரேன் ஐரோப்பிய நாடுகளின் இப்போதைய தலைமையான செக் குடியரசிடம் மனு ஒன்றை தாக்கல் செய்தது.ரஷ்யா நடத்திவரும் அதிகார மீறல் பற்றிய சலசலப்பு ஐரோப்பா முழுவதும் 2008 ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே கேட்க ஆரம்பித்துவிட்டது. விறுவிறுப்பான படக்காட்சியைப்போல பல வியூகங்கள் அரங்கேரின. இயற்கை எரிவாயு ஐரோப்பாவின் உயிர்நாடி என்பதை அடிப்படை பகடைக்காயாக வைத்து ரஷ்யா விளையாடுவதாக பல நாடுகளும் தெரிவித்தன.எரிவாயுவின் ஒட்டுமொத்த உற்பத்தி உரிமையை சாதகமாக்கி அதிக விலை நிர்ணயம், உக்கிரேன் - ரஷ்யா கூட்டு நிலத்தடி குழாய் திட்டம்,மற்றும் ஜெர்மனியின் முழு வழங்குனர் உரிமம் இவற்றால் ரஷ்யா பிரித்து-ஆளும் கொள்கையை நிர்மானிக்கிரதென ஐரோப்பிய நாடுகள் முணுமுணுக்கின்றன.இந்த முதலாத்துவ அமைப்பை புடினின் ரஷ்யா நிலைநிறுத்துவது முதல் முறையல்ல.2008 இல் நடந்த ஜார்ஜியா உடனான போரிலும் இந்த நிலைப்பாடையே ரஷ்யா முன்வைத்தது.

காஸ்ப்ரோம் முதலில் ஜெர்மனியை தங்கள் வாடிக்கையாளர் ஆக்கியது.இதற்கான முதலீடு ரஷ்யாவிலிருந்தும்,குவைத்திலிருந்தும் வந்தது.நேரடியாக ஜெர்மனிக்கு எரிவாயுவை அனுப்பி வைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. ரஷ்யாவிலிருந்து நிலத்தடி குழாய்கள் ஜெர்மனிக்கு ஆதரவு தராத சில நாடுகள் வழியே வரவேண்டியுள்ளது. மேலும் 1991 இல் தான் உக்கிரேன் ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனி நாடானது.ரஷ்யாவுடன் இருந்த குளிர் போரினால் இது அடிப்படையில் எல்லை பாதுகாப்பு பிரச்சனையை உண்டாக்கியது.இதனால் உக்கிரேன் தொண்ணூறுகளில் சந்தித்த நிதி பற்றாக்குறை,மக்களின் ஏழ்மை நிலையை மீறி தங்கள் பாதுகாப்பு படைகளுக்கு பலமான நிதி சேர்க்கத் தொடங்கியது.இப்போதும் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய ராணுவம் உக்கிரேனிடமுள்ளது.இந்நிலையில் 2007இல நடந்த பிரதமர் தேர்தலில் ரஷ்யா பின்பலத்துடன் இருந்த விக்டர் தோல்வி அடைந்து யூலியா டைமோஷ்கென்யூவிற்கு இடம் கொடுத்தார்.ரஷ்யாவை இது மேலும் எரிச்சலூட்டியுள்ளது.

கடந்த நூற்றாண்டுவரை மைய அதிகாரத்தை நிராகரித்துவந்த கம்யூனிச நாடான ரஷ்யா பலவித அரசியல் ஜாலங்களினால் ஐரோப்ப அரசியலில் ஓர் முக்கிய பங்கை என்றுமே அனுபவித்துவந்துள்ளது.கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உயிர்ப்போடு இருக்கும் ஒரே நகைமுரண் இது.1940 களில் நிலவிய பொய்யான பிரச்சாரங்கள் தங்கள் நாடு ஒரு சுதந்தர சந்தை என்னும் மாயத்தை நிலைநாட்டியது.இதனால் பகடைக்காயானது மக்கள் மட்டுமே. இப்போது எரிவாயுவை தற்காலியமாக நிறுத்தியதால் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் உள்ள பிரச்சனை ஐரோப்பா சம்மந்தப்பட்டதாகிறது.இதனால் பாதகம் உக்ரேனிற்க்கு மட்டுமல்ல;கிரேக்,டர்க்கி,இத்தாலி,ஹங்கேரி,போலாந்து மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளும் டிசம்பர் 2008 முடிவிலிருந்து குளிரில் சிக்கியுள்ளன.இதனால் நிறுவனங்கள்,பள்ளிகள்,போக்குவரத்து இழப்புகள் மட்டும் 700 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று ஐரொப்பா குடியரசின் பிரதிநிதியான செக் நாடு தெரிவித்துள்ளது.ஐரோப்பாவின் உச்சகட்ட குளிர் மாதங்கள் டிசம்பர்,ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகும்.ஜனவரி முதல் இரண்டு வாரங்களிளேயே போலாந்தில் குளிர் -25C சென்றுள்ளது.இந்த குளிரினால் பாதிக்கப்பட்டு இதுவரை இந்த வருடம் ஆரம்பித்த பத்து நாட்களில் 11 பேர் இறந்துள்ளனர்.செக் குடியரசுத் தலைவர் மிரேக் டொபொலாநெக் ரஷ்ய அதிபர் புடினுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்திருக்கும் இந்த நேரத்தில் பல நாடுகளும் இந்த நிலத்தடி குழாய்களை ஒவ்வொரு நிமிடம் கண்காணிக்கும் திட்டத்தை செயல்படுத்த முற்பட்டுள்ளது.இதனால் பல தீர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.முதலில் ஐரொப்பா யூனியனின் பலத்தை ஒருமுகப்படுத்த இது ஒரு நல்ல நேரமாகும்.பல நாடுகளும் ஓர் இலக்கை நோக்கி செல்வதால் போர் பற்றிய அபாயம் குறையும். இந்த நல்லெண்ணத்தில் சாபமும் உள்ளது. எரியாயுவை பகுத்து உபயோகப்படுத்தும் திட்டம் ஐரோப்பா நாடுகளுக்கு மிக முக்கியமாகும்.2020 இல் எரிபொருள் தட்டுப்பாடால் ஐரொப்பாவே ஸ்தம்பித்துப் போக வாய்ப்புள்ளது.ரஷ்யாவுடன் சமரசம் செய்துகொள்வது தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்தும் வளர்ச்சி கட்டமாகும்.இதை ஐரோப்பா நாடுகள் திடமாக நம்புகின்றன.

இதே நேரத்தில் ஐரோப்பா இந்த கெடுபடியிலிருந்து விடுபட வேறு உற்பத்தியாளர்களையும் பரிசீலித்து வருகிறது.ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 140bcm(billion cubic metre) எரிவாயுவின் சக்தியையும் அந்த இறக்குமதியின் விலையையும் ஒரே உற்பத்தியாளர் மட்டுமே கொடுக்க முடியும். அது காஸ்பியன் கடல்.இந்த மாற்று எரிபொருளை காஸ்பியன் கடலிலிருந்து டர்க்கி,பல்கேரியா,ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் வ்ழியே 2,400 மைல்கள் கடந்து எடுத்து வரவேண்டும்.நபூக்கோ என்ற இந்த திட்டம் செயல் முறை மற்றுமொரு அரசியல் மையத்திடமுள்ளது - இரான்.இந்த திட்டத்திற்கான 8 billion யூரொக்களை செலவு செய்ய ஐரோப்பா திட்டமிட்டியிருந்த நிலையில் புதிய அரசியல் மாற்றங்களால் கைவிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் டர்க்கி அமெரிக்காவுடம் செய்த ஒப்பந்தத்தின்படி டர்க்கி இரானிடமிருந்து எரிவாயு வாங்குவதை தடை செய்தது.இரானின் அன்னிய செலவானியை முட்டுக்கட்டவே இந்த பதில் நடவடிக்கை. இதனால் இந்த மாற்று வழியிலும் ஐரோப்பாவிற்கு எரிபொருள் கிடைக்கும் வாய்ப்பு பறிபோனது.ஐரோப்பா இருதலைக்கொல்லி எரும்பாக சிக்கலில் மாட்டியுள்ளது.இது தொடர்பாக ப்ரஸல்ஸில் நடந்த ஐரோப்பா நாடுகளின் மாநாட்டில் பயமுறுத்தும் படியான சில அறிக்கைகள் வெளியாயின.

ஆஸ்ரியா,பல்கேரியா போன்ற நாடுகளில் இருக்கும் சில அணுமின் நிலையங்கள், குறிப்பாக செர்னோபில் போன்ற பாதுகாப்பு குறைவாக உள்ள நிலையங்களை திறக்கப்போவதாக அறிவித்துள்ளன. இது உலகத்திற்கு எத்தகைய கேடு விளைவிக்கும் என்பதை 1990 களில் செர்னோபில் கசிவில்  ஐரோப்பா உணர்ந்தது.இந்த முடிவினால் ஐரோப்பாவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் செக் குடியரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்கியது.காஸ்ப்ரோம் அதிகாரிகள் 18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனிய ஆட்சியாளர்கள் போல் அதிகாரத்தையும் செல்வத்தையும் கொண்டு தங்கள் முக்கியத்துவத்தை நிலை நாட்டுவதாக உக்ரேன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.உக்ரேன் பிரதமர் தன் அறிக்கையில் - "சுதந்திரச் சந்தையின் கர்த்தாக்களான ரஷ்ய அரசு திடீரென காபிடலிசத்தின் உச்சிக் கொம்பை அமெரிக்கர்களைவிட பல மடங்கு வேகமாக நிலைநாட்டுவது இந்த நூற்றாண்டின் திருப்பமாக அமையும்." புடின் தன் பதில் அறிகையில் 'உக்ரேன் அமெரிக்காவின் உடன்படிக்கைபடி ஐரோப்பாவை பகடைக்காயாக உபயோகப்படுத்த முற்படுகிறது.மற்ற ஐரோப்பா நாடுகளுக்கு 500 டாலருக்கு ஒரு யூனிட் தரும்போது உக்ரென் போன்ற ஏழை நாட்டிற்கு 175 டாலர் மட்டுமே விற்கப்படுகிறது.உக்ரேன் வழியாக மற்ற நாடுகளுக்கு செலுத்துவதால் மட்டுமே இந்த தள்ளுபடியல்ல , எங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே உக்ரேன் இருந்ததனாலும் இது வழங்கப்படுகிறது.'

இது ரஷ்யாவின் பிரச்சனையல்ல; ஐரோப்பாவிற்கு விடப்பட்ட சவால்.இதை சமாளிக்க ஐரோப்ப வல்லுனர்கள்களால் பல மாற்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் சைனாவும் கிழக்கே மாபெறும் சக்திகளாக உருவாகிவருகின்றன.உலக பொருளாதாரத்தின் இரண்டு நூற்றாண்டுகளில் கீழ் மட்டத்தில் இருக்கும் சமயத்தில் ஐரோப்பா தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது.புஷ் ஒபாமாவிற்கு வழிவிடும் இந்த வேளையில் புது சங்கடங்களை தவிர்க்கும் மனநிலையில் அமெரிக்காவும் இருந்துவருகிறது. இந்த நேரத்தை சாதகமாக்கி அரசியல் வல்லுனர்கள் இது ஐரோப்பா தன் ஆளுமையை வெளியிடும் ஓர் உன்னதமான வேளையாகக் கருதி சில கருத்துகளை வெளியிட்டுள்ளனர். முதலாவதாக ரஷ்ய நாட்டின் காஸ்ப்ரோமுடன் சமரசம்- இது தற்காலிகமாக எரிபொருள் பிரச்சனையை சமாளிக்கும். ரஷ்யா மற்றும் உக்ரேன் எரிபொருள் உடன்படிக்கை ஓராண்டிலிருந்து பத்தாண்டுகால உடன்படிக்கையாக மாற வேண்டும்.இதன் மூலம் ரஷ்யா ஐரோப்பாவுடன் தனக்கு இருக்கும் ஆதிக்கத்தை ஒவ்வொறு ஆண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தாது. மேலும் அரசியல் மாற்றங்களினாலும் 2008 இல் ஜார்ஜியா யுத்தத்தினாலும் ஏற்பட்ட சமாதானத்தினாலும் ரஷ்யா தன் போக்குப்படி ஆட்டங்களை மாற்றிக்கொண்டிருக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது.மேலும் உக்ரேன் தன் எரிவாயு தேவைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் - கிட்டத்தட்ட 80 சதவிகிதம் இரும்பு ஆலைகள் கொண்ட உக்ரேன் தன் உற்பத்தி குறைகளால் மிக அதிகமான எரிவாயுவை பயன்படுத்துகிறது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களினாலும் இந்த தேவையை குறைக்க முடியும்.ஐரோப்பா அமெரிக்காவின் கட்டாயத்தினால் நிறுத்தப்பட்ட இரானிய எரிவாயுவை இந்தியா மற்றும் டர்க்கி போன்ற நாடுகளின் நல்லுறவினால் மீண்டும் பெற முடியும் என்பது வல்லுனர்களின் நம்பிக்கை.நம் நாட்டின் அமெரிக்க உடன்படிக்கையில் இதை பற்றி ஒன்றும் இல்லாவிட்டாலும், புது திட்டங்களை புகுத்த அமெரிக்கா தயங்காது. இதன் மூலம் தங்கள் நாட்டின் எரிபொருள் தேவையை ஐரோப்பா தீர்க முடியுமென வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் ரஷ்யா தங்கள் குழாய்களை திறந்துவிட்டதாகவும், உக்ரேன் தங்கள் பகுதியில் உள்ள குழாய்களை திறக்கவில்லை என்றும் புதிய விவாதம் தொடங்கியுள்ளது. பல்கேரியா,ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் இன்னும் குளிர் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க - மக்களின் அத்தியாவசிய தேவையான எரிபொருளுக்காகக் கூட ஓர் சமாதானத்திற்கு வராத அரசியல் குழப்பக்களின் முடிவிற்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்ற நாட்டுகளோ இந்த நெருக்கடியில் போர் மூண்டால் உண்டாகும் உலக நிதிநெருக்கடியின் நிலமையை கவலையுடன் பார்த்துவருகிறது.

---------------------------------------------------------

இந்த கட்டுரை எழுத உதவிய தளங்கள்:-

1.http://www.guardian.co.uk/commentisfree/2009/jan/07/gazprom-oil-russia
2.http://www.foreignpolicy.com/story/cms.php?story_id=3696
3.http://www3.signonsandiego.com/stories/2009/jan/14/eu-ukraine-russia-gas-011409/
------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை